1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (15:48 IST)

மகரம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - பலன்: ஆன்மீக நாட்டங்களை கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த  மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.  எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம்  நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல்  ஆரோக்கியம் பெறும்.
தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும்.  வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
 
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள்  வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில்  கவனம் தேவை. பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல்  இருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட  தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும்.
 
அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த  விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை  படிக்கும் போது அதில் கவனத்துடன் படிப்பது நல்லது.
 
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும்  உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள்  நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
 
திருவோணம்:
 
இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின்  ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன  நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும்.
 
அவிட்டம் 1,2 பாதங்கள்:
 
இந்த மாதம் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு  முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில்  காலதாமதம் உண்டாகும்.  
 
பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 30, 31.
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 23, 24, 25.